உலகம்

எண்ணெய் விலை சரிவு!

  • April 17, 2026
  • 0 Comments

ஈரான் போரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு  செய்துள்ளது. அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் பங்குச் சந்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகளின் சங்கமத்தை தடுக்கும் புல்லுருவிகள்: சாணக்கியன் சீற்றம்!

  • April 17, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார். மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; “தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், […]

இலங்கை செய்தி

14 இந்திய மீனவர்களுக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்

  • April 17, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மன்னார் வடக்கு, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த நிலையில், கடந்த 9ஆம் திகதி 10 மீனவர்களும், அதனைத் தொடர்ந்து 14ஆம் திகதி 4 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் […]

செய்தி தமிழ்நாடு

பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்.. வைரலாகும் காணொளி..!

  • April 17, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.  

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு, ஈரானுக்கு எதிரான முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு வர்த்தகத்துக்கு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஈரானுடன் அமெரிக்காவின் வர்த்தக விவகாரம் முழுமையாக முடிவடையும் வரை, ஈரானை இலக்குவைத்த கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இந்த செயன்முறை விரைவாக நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

வாய்ப்பை வீணடிக்கக் கூடாது – லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானவை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன்,தெரிவித்துள்ளார். போர் நிறுத்தமே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முக்கிய நுழைவாயில் என அவர் கூறியுள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவது, தெற்கு பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை உறுதி செய்வது, கைதிகளை விடுவிப்பது மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை லெபனானின் முக்கிய இலக்குகள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டுகளில் பல சிரமங்களை எதிர்கொண்ட லெபனான் மக்கள் தற்போது புதிய […]

இலங்கை செய்தி

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

  • April 17, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  அவரிடம் கையளிக்கப்பட்டது. நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் தேசிய திட்டமிடல், பொது நிதி மேலாண்மை, பருவகால பொருளாதார முன்கணிப்பு, […]

உலகம் செய்தி

அனைவருக்கும் வெற்றி தேவை: போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு அதிகம் என நிபுணர் கருத்து

  • April 17, 2026
  • 0 Comments

அனைத்துத் தரப்பினரின் நலன்களுக்காக அமைதி அவசியம் என மத்திய கிழக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் கவனம் செலுத்தும் ‘சதம் ஹவுஸ்’ சிந்தனைக் குழுவின் இணை ஆய்வாளரான டாக்டர் லீனா கதிப், பிபிசியிடம் பேசியபோது, இந்த 10 நாள் போர் நிறுத்தம் மேலும் நிலையான ஒரு தீர்வுக்குத் தாரகமாக அமையும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறினார். “அனைத்து தரப்பினருக்கும் வெற்றியை வெளிப்படுத்துவது முக்கியமானது. அதனால் அமைதி அவர்களுக்கே நன்மை தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைப் […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!

  • April 17, 2026
  • 0 Comments

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ‘தமிழினி’ என்ற படத்திற்கு ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். டி.பி. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் தற்போது ‘தமிழினி’ என்ற புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். ‘தமிழினி’ திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் பாலாஜி […]

செய்தி தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் […]