பிரதமர் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி இடையே சந்திப்பு
நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (19) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துணை ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தினர். பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் […]













