போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் – 150 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன் கடந்த 24 மணித்தியாலங்களில், 150 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு ஒழித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
டெலிகிராம் செயலியில் வெளியிட்ட அறிக்கையில், லெபனானின் பல பகுதிகளில் உள்ள கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட சுமார் 300 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் IDF கூறியுள்ளது.
மேலும், பல ஹிஸ்புல்லா தளபதிகளும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் தனது படையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தொடர்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் IDF தெரிவித்துள்ளது.





