பிரெக்ஸிட்டில் மீள இணைய ஆர்வம் காட்டும் மக்கள்!
பிரித்தானியாவில் 53 சதவீதமான மக்கள் மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது.
‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ ( Best for Britain) நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு, தொழிலாளர் கட்சி, லிபரல் டெமாக்ரட் மற்றும் பசுமைக் கட்சி வாக்காளர்களிடையே அதிகமாக உள்ளது.
அதே சமயம் கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்த ஐக்கிய இராச்சிய கட்சி ஆதரவாளர்களிடையே குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





