இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துள்ளார்.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbor First Policy) கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.





