தெற்கு லெபனானில் தாக்குதல் – பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் சடலம் பாரிஸுக்கு
தெற்கு லெபனானில் உயிரிழந்த பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் உடல் இன்று மாலை பாரிஸுக்கு அனுப்பப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை (யூனிஃபில்) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை, யூனிஃபில் ரோந்து குழுவின் மீது சிறு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்தப் படையில் பணியாற்றிய ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்புள்ளதாக குற்றம் சுத்தினார்.
இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த மூன்று அமைதிப்படை வீரர்களில் இருவர் பெய்ரூட்டில் சிகிச்சை பெற்று வருவதாக யூனிஃபில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஹிஸ்புல்லா மறுத்துள்ளதுடன், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவசரமாக முன்வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.





