இத்தாலியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதமடைந்ததால் அச்சத்தில் மக்கள்
இத்தாலியில் நேற்றைய தினம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் குழப்பகரமான நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்பி ஃபிளெக்ரே (Campi Flegrei) எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள பொசூலி (Pozzuoli) நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஏராளமான மின்வெட்டு மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில இடங்களில் நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. […]













