ஐரோப்பா

இத்தாலியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதமடைந்ததால் அச்சத்தில் மக்கள்

இத்தாலியில் நேற்றைய தினம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் குழப்பகரமான நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்பி ஃபிளெக்ரே  (Campi Flegrei) எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள பொசூலி  (Pozzuoli) நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஏராளமான மின்வெட்டு மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சில இடங்களில் நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

இந்நிலையல் இந்த அனர்த்த நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொசூலி மேயர் லூயிஜி மான்சோனி (Luigi Manzoni),

“தொடர்ந்து நடைபெற்று வரும் நில அதிர்வுகளின் போக்கை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்க, நாங்கள் வெசுவியஸ் ஆய்வகம், குடிமைப் பாதுகாப்புத் துறை மற்றும் அனைத்துத் தகுதிவாய்ந்த அதிகாரிகளுடனும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம்.”

நிலநடுக்கம் காரணமாக, நேபிள்ஸ் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன” என்றார்.

இத்தாலியில் சமீபத்தில் வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகவில்லை என்றபோதிலும் கடந்த 1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியது. அப்போது 2700 பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்