பிரித்தானியாவில் சீன தூதரகத்தை நிர்மாணிக்க நீதிமன்றம் ஒப்புதல்
பிரித்தானியாவில் சீனா மிகப் பெரிய தூதரகத்தை கட்டுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் சட்டப்பூர்வமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகள் பழமையான ராயல் மின்ட் கோர்ட் (Royal Mint Court ) இருந்த இடத்தில் இந்த தூதகரத்தை நிர்மாணிக்க சீனா தாயாராகி வருகின்ற நிலையில், அங்கு வசிக்கும் அல்லது வணிகங்களை மேற்கொண்டு வரும் உள்ளுர்வாசிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ராயல் மின்ட் கோர்ட் குடியிருப்போர் சங்கம் (RMCRA) தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.
தங்களைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் மனித உரிமை மீறல் நிகழும் என்பதற்கான நியாயமான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களை RMCRA முன்வைக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் திட்டமிடல் நிபந்தனைகளை அமல்படுத்துவது மற்றும் திட்டங்கள் குறித்த முந்தைய விசாரணையின் போது தொடர்புடைய ஆவணங்களை வெளியிடத் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பான RMCRA-வின் வாதங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.




