ஸ்பெயினின் எல்லையைக் கடக்க முயன்ற 67 அகதிகள் பலி
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான ‘செவுடா’ (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
செவுடா எல்லைக்குள் நுழைய முயன்றபோது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லைச் சுவரின் கடலலைத் தடுப்பில் ஏற முயன்றபோது நசுங்கியும், கடலில் மூழ்கியுமே பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். எல்லைக்கு மறுபுறமுள்ள மொராக்கோ பகுதியிலும் கூடுதல் உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசே மானுவல் அல்பாரெஸ் (Jose Manuel Albares) கூறுகையில், “செவுடாவுக்குள் நுழைந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது மொராக்கோவிற்கே திரும்பிச் சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
அகதிகளின் இந்தத் திடீர் ஊடுருவல் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எல்லைப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.




