ஐரோப்பா

குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை – பிரித்தானியாவில் அறிமுகம்

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் இம்மாதம் முழுவதும் தொடரும்.

இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் (Heidi Alexander) தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் ‘கிரேட் பிரிட்டிஷ் சம்மர் சேவிங்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், குழந்தைகளின் உணவு, நாடக மற்றும் சினிமா டிக்கெட்டுகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்குகள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) குறைத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்