ஐரோப்பா

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – தாக்குதால்தாரி உள்பட மூவர் பலி

மொஸ்கோவில் பெண் ஒருவர் கொண்டுவந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது  21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குட்ரிங்க்ஸ்காயா (Kudrinkskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றப்போது பாதுகாப்பு ஊழியர் அவரை தடுத்ததாகவும், இதன்போதே வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் மொஸ்கோ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதில்  தாக்குதல்தாரியான குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் இத்தாலிய உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பலர் தீவிர தன்மையான காயங்களை கொண்டுள்ளதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்களையோ, அல்லது இதற்கு யார் காரணமாக இருந்திருக்கலாம் என்று தாங்கள் கருதுபவர்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.

மேலும் இதுவொரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலாக சந்தேகிக்கப்படுவதுடன், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்