உலகம் செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா, சீனா இணக்கம்!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோர், பீஜிங்கில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய வர்த்தக முறையைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தைவான் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் […]

இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி;மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன!

  • April 30, 2026
  • 0 Comments

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் நேற்று (ஏப்ரல் 29) மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். “ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட 211 மற்றும் 220 எலும்புக்கூடுகளின் ஆகியவற்றின் பகுதியளவிலான எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]

செய்தி விளையாட்டு

இமாலய இலக்கை இலகுவில் எட்டிய ஹைதராபாத் அணி!

  • April 30, 2026
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 44 பந்துகளில் சதம் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் […]

ஐரோப்பா

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் – நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கொசோவா!

  • April 29, 2026
  • 0 Comments

கொசோவோ மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியோசா ஒஸ்மானிக்கு (Vjosa Osmani) தேவையான ஆதரவாளர்கள் அல்லது போதுமான பெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக நாடாளுமன்றம் தானாகவே கலைந்தது. இதுனையடுத்து அடுத்துவரும் 45 நாட்களுக்குள் புதிய தேர்தல் இடம்பெற்று உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும். மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்காக செர்பியாவுடனான உறவுகளைச் சரிசெய்ய நாடு முயன்று வரும் நிலையில், அரசியல் நிச்சயமற்ற தன்மை பெரும் […]

உலகம்

போர்களத்தில் வடகொரிய வீரர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு – பலர் உயிர் மாய்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட வீரர்களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார். ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுடன் சண்டையிடும்போது, ​​எதிரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காகக் குறித்த வீரர்கள் கையெறி குண்டுகளைபயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டனர். இது, அங்கு நடைமுறையில் உள்ள தீவிரமான போர்க்களக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தப்பி ஓடியவர்களின் சாட்சியங்கள் உட்பட, பெருகிவரும் ஆதாரங்கள், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தல் அல்லது பிற தற்கொலை […]

உலகம்

ஈரான் மீதான போர் : செலவு விபரம் வெளியானது!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான போர் காரணமாக இதுவரை சுமார் 25 மில்லியன் டொலர் செலவழிந்துள்ளதாக பென்டகனின் நிதிநிலை அதிகாரியான ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst)  தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் (Pete Hegseth) நாடாளுமன்ற விசாரணையின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மார்ச் மாத தொடக்கத்தில் “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” வரை நீடிக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்ட  இந்தப் போர், தற்போது எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக […]

ஐரோப்பா செய்தி

யூத சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் : கண்டனங்கள் மட்டும் போதுமானதல்ல!

  • April 29, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் யூதப் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் (Golders Green) இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவம் அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 76 மற்றும் 34 வயதுடைய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தேகநபர் பொலிஸாரை கத்தியால் குத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதேநேரம் மேற்படி தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர், யூதப் பொதுமக்களைக் கத்தியால் குத்த முயன்றதாகக் யூதப்  கண்காணிப்புக் குழுவான […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிர விசாரணைகளின் கீழ் 09 பேர் கைது!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை, கட்டாயத் திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா, மெக்சிகன், இத்தாலி , ஸ்பெய்ன், ஸ்வீடன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் உள்ளடங்களாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள், க்ரூவில் உள்ள வெப் ஹவுஸை தளமாகக் கொண்ட ‘அமைதி மற்றும் ஒளியின் அஹ்மதி மதம்’  (Ahmadi […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

  • April 29, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது. முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து […]

உலகம் செய்தி

பயங்கரவாதத் தாக்குதலா? விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 29, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் யூதர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத சம்பவமா என பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். தாக்குதலை நடத்திய 45 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இரு ஆண்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. 30 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் […]