போர்களத்தில் வடகொரிய வீரர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு – பலர் உயிர் மாய்ப்பு!
ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட வீரர்களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுடன் சண்டையிடும்போது, எதிரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காகக் குறித்த வீரர்கள் கையெறி குண்டுகளைபயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டனர்.
இது, அங்கு நடைமுறையில் உள்ள தீவிரமான போர்க்களக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது.
உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தப்பி ஓடியவர்களின் சாட்சியங்கள் உட்பட, பெருகிவரும் ஆதாரங்கள், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தல் அல்லது பிற தற்கொலை முறைகளில் ஈடுபடுமாறு வட கொரிய வீரர்களுக்கு வெளிப்படையாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
2024 ஆம் ஆண்டில் போர்களத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட சுமார் 14,000 உயரடுக்கு வீரர்களை வடகொரியா அனுப்பியது.
அந்த வீரர்கள், சுட்ஜா என்ற எல்லை நகரத்தைச் சுற்றியுள்ள போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர். அந்த நகரத்தை, உக்ரேனியப் படைகள் திடீர் எதிர்-ஆக்கிரமிப்பின் மூலம் கைப்பற்றின.
தென் கொரிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, கடுமையான சண்டையில் 6,000-க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




