ஈரான் மீதான போர் : செலவு விபரம் வெளியானது!
அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான போர் காரணமாக இதுவரை சுமார் 25 மில்லியன் டொலர் செலவழிந்துள்ளதாக பென்டகனின் நிதிநிலை அதிகாரியான ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் (Pete Hegseth) நாடாளுமன்ற விசாரணையின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர், தற்போது எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது.
இந்நிலையில் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக உள்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் “ஹெக்ஸெத்தைக் கைது செய்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருக்க, மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், “பாடசாலைக் குழந்தைகள் மீது குண்டுவீச ஏன் உத்தரவிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
இருப்பினும் ஹெக்ஸெத் அவர்களை புறக்கணித்துவிட்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




