அமைதியை விரும்பாத இஸ்ரேல்: துருக்கி கடும் விசனம்
இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை – என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
சிரிய வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளார்.
குறிப்பாக, அமைதி உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசா மற்றும் மேற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அமைதியற்ற போக்கையே வெளிப்படுத்துவதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலையும், இஸ்ரேலின் ராணுவ அணுகுமுறை குறித்த துருக்கியின் அதிருப்தியையும் அவரது கருத்து வெளிப்படுத்துகின்றது.




