உலகம்

பறக்கும் பொருள் பற்றிய இரகசியம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்கள், நேற்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, ​​அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள், விண்வெளிப் படை மற்றும் ஈரான் போர் போன்ற தலைப்புகள் குறித்தும் அதிபர் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விண்வெளி வீரர்களின் திறமையைப் பாராட்டிய ட்ரம்ப், “இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை, ஆனால் நமது நாட்டை மகத்தானதாக மாற்ற இவர்களைப் போன்றவர்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

“பேசத் தெரியாத பிஞ்சு… எங்கே போனாளோ? – தேடித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காணாமல் போன சிறுமி தனது சகோதரியின் மகள் என்பதை ஆஸ்திரேலிய செனட்டர் Jacinta Nampijinpa Price உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் ‘ஓல்ட் டைமர்ஸ்’ (Old Timers Camp) முகாமில் உள்ள வீட்டில் சிறுமி ஷரோன் உறங்க வைக்கப்பட்டார். அன்று இரவு 11.30 மணியளவில் ஜெபர்சன் லூயிஸ் (Jefferson Lewis) என்பவருடன் அந்தச் சிறுமி கைகோர்த்துச் […]

ஐரோப்பா

337 மதிப்புமிக்க தொல்பொருட்கள் இத்தாலியிடம் ஒப்படைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

இத்தாலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 337 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்நடவடிக்கையானது ரோம் மற்றும் வொஷிங்டனுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எத்ருஸ்கன் மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் வரையிலான இந்தத் தொல்பொருட்களின் தொகுப்பு, இத்தாலியின் கராபினேரி கலாச்சாரப் பாதுகாப்புப் பிரிவின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட நீண்ட தொடர் விசாரணைகளின் விளைவாக இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. […]

இந்தியா

சோலாரை பயன்படுத்த இந்திய மக்களுக்கு வலியுறுத்தல்!

  • April 30, 2026
  • 0 Comments

வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டைப் பகல் நேரங்களுக்கு மாற்றுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  எரிசக்தி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ( Pralhad Joshi), இந்தியாவின் பாதிப்பு பெரும்பாலும் வணிக ரீதியான எல்பிஜி-யுடன் மட்டுமே தொடர்புடையது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார். இரவில் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பகல் நேரங்களில் சமையல், வாகனங்களை சார்ஜ் […]

விளையாட்டு

ஆர்.சி.பி., குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • April 30, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 42 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது. பெங்களூரு […]

உலகம் செய்தி

“Golders Green தாக்குதல் பயங்கரவாதச் செயல்”

  • April 30, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதச் செயல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த யூத சமூகத்தை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதேவேளை, யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது என யூத சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், குறித்த “யூத எதிர்ப்புத் தாக்குதல்” முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததுடன், […]

இலங்கை

யாழில் Online கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

  • April 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் Online விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சூழலில், […]

இலங்கை

நாளை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

பிரான்ஸ் விரைகிறது சிஐடி குழு? நடக்கப்போவது என்ன?

  • April 30, 2026
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் CID ஷானி அபேசேகர Shani Abeysekera உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான, புலனாய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் குழு பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்துவதே அவர்களின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் […]

உலகம்

4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.