பொழுதுபோக்கு

OTT இல் வெளியாகும் மூன்றாம் பிறை!

  • April 30, 2026
  • 0 Comments

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை அமேசான் பிரைம் OTT தளத்தில் நாளை (01) வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘கண்ணே கலைமானே’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பூங்காற்று புதிதானது’ போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழுவுக்கு கனடாவில் கதவடைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

கனடா வான்கூவரில் நடைபெறவுள்ள FIFA ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவந்த ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள், கனடா குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முறைப்படியான விசாக்களை வைத்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்புடன் தொடர்புடைய மெஹ்தி தாஜ் என்பவருக்கே அனுமதி மறுக்கப்பட்டதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IRGC ஐ கனடா […]

உலகம் செய்தி

அத்துமீறுகிறது இஸ்ரேல்: ஐ.நா. அறிக்கையாளர் விசனம்!

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடற்பரப்பில் ‘குளோபல் சுமுத்’ கப்பல் தொடரணியை இஸ்ரேல் தாக்கி கைப்பற்றியதை ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் Francesca Albanese கடுமையாகச் சாடியுள்ளார். ஐரோப்பாவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது இஸ்ரேலின் எல்லைகளற்ற நிறவெறிக் கொள்கையையே காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புச் செயலை ஒரு சர்வதேச மனித உரிமை மீறலாக ஐ.நா. அறிக்கையாளர் அடையாளப்படுத்தியுள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

  • April 30, 2026
  • 0 Comments

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். காணி உரிமைக்காக வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புவது தீர்வுக்கு வழிவகுக்காது எனச் சுட்டிக்காட்டிய அவர், அந்த இலக்கை அடைவதற்கான இலகுவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதன் ஒரு அங்கமாகவே, தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை அங்கு […]

இந்தியா முக்கிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் கரு உண்டானால் கலைக்கலாமா? மாறும் சட்டமூலம்!

  • April 30, 2026
  • 0 Comments

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமியின் 31 வாரக் கருவைக் கலைக்க உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. பெண்கள் தங்கள் உடல்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமையை உறுதிசெய்து, தற்போதுள்ள சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கருக்கலைப்புக்கான கால வரம்பு (சட்டப்பூர்வ வரம்பான 24 வாரங்கள்) பொருந்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. குடிமக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமி […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, இத்தாலி ஆராய்வு!

  • April 30, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் தூதுவர் Damiano Francovigh, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினர். குறிப்பாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தூதர் Francovigh, இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையேயான நீண்டநாள் நட்புறவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன், பல துறைகளில் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு எதிரான புதிய ராணுவ திட்டம்: ட்ரம்புக்கு விளக்கமளிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய கட்டளை பணியகத்தின் தளபதி CENTCOM commander, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. பெரும்பாலும் இன்று இதற்குரிய சந்திப்பு இடம்பெறும் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடனான போர்ச்சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தற்போது ராஜதந்திர முயற்சிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுவருகின்றது. இது கைகூடாத பட்சத்தில் பாரிய ராணுவ நடவடிக்கைமூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே சாத்தியமான புதிய ராணுவ […]

இந்தியா செய்தி

பெங்களூருவில் அடை மழை: சுவர் இடிந்து விழுந்து எழுவர் பலி!

  • April 30, 2026
  • 0 Comments

இந்தியா, பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் வைத்தியசாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மாலை 7 மணி வரை கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர […]

உலகம் செய்தி

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேல் வலியுறுத்து!

  • April 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும், யூத சமூகத்தைப் பாதுகாக்க உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்வாழும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இஸ்ரேல் […]