ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரால் தவிக்கும் செவுட்டா நகரத்திற்கு நிதி உதவி வழங்க பரிசீலனை

செவுட்டா நகரத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஆணையம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சுமார் 72000 சட்டவிரோத குடியேறிகள் எல்லை தடுப்புகளை உடைத்துக்கொண்டு செவுட்டாவிற்குள் அத்துமீறி பிரவேசித்தனர்.

இதன்காரணமாக சுமார் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் ஸ்பெயின் எல்லையில் தவிப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் செவுட்டா நகரகத்தில் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து வருகிறது.

இதற்கமைய ஸ்பெயினிடமிருந்து முதல் தேவைகள் மதிப்பீட்டை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் நேற்று பெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரஸ்ஸல்ஸ் அந்த மதிப்பீட்டை ஆய்வு செய்து வருகிறது. “அடுத்த கட்டமாக, ஸ்பெயின் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அதை ஆணையத்திடம் முறையாகச் சமர்ப்பிக்கும்,” என்றும் அதிகாரி கூறினார்.

இந்த புதிய நிதியானது, எல்லை மேலாண்மை உபகரணங்கள் மற்றும் சேவைகள், அத்துடன் செவுட்டாவில் உள்ளவர்களுக்கான மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

நடைமுறையில், ஸ்பெயினின் விண்ணப்பத்தைப் பொறுத்து, தற்காலிக தங்குமிடங்கள், உணவு, மருத்துவ உதவி, அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.

விண்ணப்பம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கோரப்பட்ட நிதியின் அளவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்