ஐரோப்பா செய்தி

யூத சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் : கண்டனங்கள் மட்டும் போதுமானதல்ல!

வடக்கு லண்டனின் யூதப் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் (Golders Green) இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவம் அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 76 மற்றும் 34 வயதுடைய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சந்தேகநபர் பொலிஸாரை கத்தியால் குத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேநேரம் மேற்படி தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர், யூதப் பொதுமக்களைக் கத்தியால் குத்த முயன்றதாகக் யூதப்  கண்காணிப்புக் குழுவான ஷோம்ரிம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட தலைமை அதிகாரி ரபி சர் எஃப்ரைம் மிர்விஸ் (Rabbi Sir Ephraim Mirvis) மற்றும் யூதத் தலைவர்கள், யூத-விரோத வன்முறைக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

கண்டனம் மட்டும் இனி போதுமானதல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த உணர்வை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகமும் எதிரொலித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் லண்டன் மற்றும் மென்செஸ்டரில் உள்ள யூதத் தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!