உலகம் செய்தி

அமெரிக்காவின் அமைதித் திட்டம் குறித்து அலசி ஆராய்கிறது ஈரான்!

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை ஈரான் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.

ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் Esmail Baghaei மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்படி முன்மொழிவு குறித்து ஈரான் தனது கருத்துகளையும் , நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி வருகின்றது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் சமரச பேச்சு தற்போது வெற்றிகரமான பாதையில் பயணிப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!