ஐரோப்பா செய்தி

ஃபரேஜை நம்பர் 10 க்கு கொண்டு வர தயாராகும் டோரிகள் – லிபரல் டெமாக்ரட்ஸ் குற்றச்சாட்டு

கன்சர்வேடிவ் தலைவர் Kemi Badenoch மீது லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.

உள்ளூர் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கவுன்சிலர்கள் Reform UK கட்சியுடன் ஒப்பந்தங்கள் அல்லது இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என Sky News  நேர்காணலில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், கன்சர்வேடிவ் கொள்கைகளை செயல்படுத்த உதவும் எவருடனும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என பதிலளித்தார்.

இந்த பதிலைத் தொடர்ந்து, லிபரல் டெமாக்ரட்ஸ் துணைத் தலைவர் Daisy Cooper கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “இது கன்சர்வேடிவ் கட்சி Reform UK உடன் கூட்டணி அமைக்க வழி திறப்பதாக உள்ளது. இது அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் போல தெரிகிறது” என்றார்.

மேலும், முன்னாள் Reform UK கட்சி தலைவர் Nigel Farage எதிர்காலத்தில் அரசியல் அதிகார மையத்தில் இடம்பெறலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரம், பிரித்தானிய அரசியலில் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி மற்றும் எதிர்கால தேர்தல் நிலைமை குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!