உலகம்

வர்ஜீனியாவில் அவசரநிலை பிறப்பிப்பு – பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

  • July 23, 2026
  • 0 Comments

வர்ஜீனியாவின் 55 மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளும் வணிக நிறுவனங்களும் நீரில் மூழ்கின. அத்துடன் பாலங்கள் உடைந்ததுடன், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக ஆளுநர் பேட்ரிக் மோரிசி (Patrick Morrisey) அவசரநிலையை பிறப்பித்தார். அத்துடன் 100 தேசிய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளார். அதே நேரத்தில், தேசிய வானிலை ஆய்வு மையம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் குறித்து அவசர […]

இலங்கை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறிய இலங்கை

  • July 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது. தரவரிசையின்படி, 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. அதேநேரம்  கடந்த 2021 ஆம் ஆண்டில்,   107வது இடத்திலும், 2022 இல் 102வது இடத்திலும், 2023இல்  100வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த தரவரிசையில், சிங்கப்பூர் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள […]

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஈரான் ஒப்பந்தம் ஒன்றை செய்ய கெஞ்சுகிறது: மார்கோ ரூபியோ

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹ்ரான் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒவ்வொரு இரவும் அது கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ இதனை தெரிவித்துள்ளார். ஈரான் தன் உணர்வுக்குத் திரும்பும் வரை, ஒவ்வொரு இரவும் அது அதிக விலையைக் கொடுக்கும் என்று கூறினார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறது, ஆனால் […]

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியா இன்று முதல் குழாய் நீர் பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடு

  • July 23, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டனின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனமான தேம்ஸ் வாட்டர், தனது விநியோக வலையமைப்பு முழுவதும் உள்ள வீடுகள் இந்த நடவடிக்கைகளை உடனடியாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், சிறுவர் நீச்சல் குளங்களை நிரப்புதல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற தேவைகளுக்குக் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் 100 டொலரை எட்டும் கச்சா எண்ணெய் விலை!

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் இராணுவப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரென்ட் கச்சா எண்ணெயின் ஒரு பேரலின் விலை, 98 அமெரிக்க டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆறு வாரங்களில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்பாகும். WTI ஒரு பேரலின் விலையும் 90 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இதற்கிடையில், கச்சா […]

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களுக்கு மறியல்

  • July 23, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்றுக் காலை மீன்பிடி இழுவைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்களும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த நிலையிலேயே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் […]

உலகம்

தாய்லாந்தில் சோதனை சாவடியில் குண்டுத் தாக்குதல் – 05 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  • July 23, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தெற்குப் பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குல் இடம்பெற்றுள்ளது. இதில்  ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. நாரதிவாட் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், “தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்திய “ஒரு அப்பட்டமான பயங்கரவாதச் செயல்” என்று விவிரித்துள்ளார். அத்துடன் […]

இலங்கை

எல் நினோ நிகழ்வால் தீவிரமடையும் வானிலை – கனமழைக்கு தயாராகுமாறு எச்சரிக்கை

  • July 23, 2026
  • 0 Comments

இலங்கையில் எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் உச்சம் முன்னர் கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே ஏற்படக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபெண்டி எச்சரித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் அதன் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை கடுமையான வறண்ட வானிலையை அனுபவிக்கக்கூடும் என்றும், அதே […]

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குப் புறப்பட்டுள்ளார். உலகம் செய்தி

போருக்கு மத்தியில் ஈரானில் களமிறங்கினார் ஈராக் பிரதமர்

  • July 23, 2026
  • 0 Comments

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவே அவர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமையும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை குறித்து ஈராக் அரசின் ஊடகத் தொடர்பாளர் ஹைதர் அல்-அபூதி முன்னரே தகவல் வெளியிட்டுள்ளார். ஈரான்மீது அமெரிக்கா 12ஆவது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றது. […]

தீவிரவாத மதகுருமார்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடே ஈரான் என விமர்சித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ. உலகம் செய்தி

தீவிரவாத மதகுருமாரே ஈரானை ஆள்கின்றனர்- அமெரிக்கா கடும் விசனம்

  • July 23, 2026
  • 0 Comments

தீவிரவாத மதகுருமார்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடே ஈரான் என விமர்சித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டையே அழித்து வருகிறார்கள். அவர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும். ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் தங்களது நாட்டின் பணத்தை எடுத்து ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள் மற்றும் […]