இலங்கை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறிய இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.

தரவரிசையின்படி, 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

அதேநேரம்  கடந்த 2021 ஆம் ஆண்டில்,   107வது இடத்திலும், 2022 இல் 102வது இடத்திலும், 2023இல்  100வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்த தரவரிசையில், சிங்கப்பூர் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள நாடாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாடு முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மேலும்  ஆப்கானிஸ்தான் 104வது இடத்துடன் தரவரிசையின் கடைசி இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடானது, கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமல் சென்றடையக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கடவுச்சீட்டுகளைத் தரவரிசைப்படுத்துகிறது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்