உலகம்

வர்ஜீனியாவில் அவசரநிலை பிறப்பிப்பு – பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

வர்ஜீனியாவின் 55 மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகளும் வணிக நிறுவனங்களும் நீரில் மூழ்கின. அத்துடன் பாலங்கள் உடைந்ததுடன், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலை காரணமாக ஆளுநர் பேட்ரிக் மோரிசி (Patrick Morrisey) அவசரநிலையை பிறப்பித்தார். அத்துடன் 100 தேசிய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளார்.

அதே நேரத்தில், தேசிய வானிலை ஆய்வு மையம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் குறித்து அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஏழு அங்குலம் வரை மழை பெய்தபோதிலும், உடனடியாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. நீரில் மூழ்கிய வாகனங்களும், அவசர மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி கனமழை காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன், பெரும்பாலான இடங்களில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்