ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – 32 தொழிற்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகக் கோரிக்கை

உள்ளாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தேர்தல்களில் கட்சி சந்தித்த கடும் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என தற்போது தொழிற்கட்சியின் 403 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine West, பிரதமரின் புதிய உரை பலனளிக்கவில்லை என்றால் அவரது தலைமையைக் கேள்விக்குட்படுத்துவேன் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே படிப்படியான மாற்றங்கள் போதாது என ஒப்புக்கொண்டுள்ள ஸ்டார்மர், நாட்டின் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான  புதிய திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் தொழிலாளர் கட்சித் துணைத் தலைவர் Angela Rayner, Andy Burnham மீண்டும் நாடாளுமன்ற அரசியலுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருப்பதும் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!