ஸடார்மருக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் – கேத்தரின்
தொழிலாளர் கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் Catherine பிரதமர் Starmerக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஸ்டார்மருக்கு எதிராக நேரடியாக போட்டியிட முன்வராவிட்டால், தானே தலைமைப் போட்டிக்கான பெயரை முன்வைப்பேன் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை சற்று மாற்றி, இன்று பிரதமரின் உரையின் பின்னர் திருப்தி இல்லையெனில் நாடாளுமன்ற தொழிலாளர் கட்சிக்கு என் பெயரை அனுப்புவேன் என தெரிவித்தார்.
தலைமைப் போட்டியைத் தொடங்குவதற்கு குறைந்தது 81 தொழிற் கட்சி எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், போதுமான ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இது தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக அல்ல என கூறிய அவர் உழைக்கும் மக்களுக்காகவும் கட்சியின் எதிர்காலத்திற்காகவும் என வலியுறுத்தினார்.





