மெக்சிகோ எல்லையில் 06 சடலங்கள் மீட்பு!
டெக்சாஸின் லாரெடோவில் (Laredo) ரயில் பெட்டியொன்றில் இருந்து 06 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர ரயில் யார்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்த உடல்களை கண்டறிந்தார்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து சடலங்களை கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர்களின் பூர்வீகம் வெளியிடப்படவில்லை.
அதேநேரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் இதேபோன்ற சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்தோர் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





