இலங்கை செய்தி

மீண்டும் வந்தாள் ‘யாழ் தேவி’!

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ். தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ். தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

யாழ். தேவி ரயிலின் வாராந்த பயண நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு, கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ். தேவி பயணிக்கும்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். தேவி பயணிக்கும்.

யாழ். தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்புப் பெட்டிகளைக் கொண்டது.

இதில் பயணிகளுக்கான இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதிகளும் ரயில்வே திணைக்களத்தால் செய்யப்பட்டுள்ளன.

வட பகுதிக்கும் தலைநகருக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்தும் இந்த ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை