காசா நோக்கிச் சென்ற உதவிப் படகுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – பல நாடுகள் கண்டனம்
காசாவை நோக்கிச் சென்ற உதவிப் படகுக் குழுவில் இருந்த 41 படகுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 10 படகுகள் இன்னும் காசாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் தகவலின்படி, அந்தப் படகுகள் காசாவிலிருந்து சுமார் 121 கடல் மைல்கள் தொலைவில் இருந்தன. காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கடந்த வாரம் துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகள் புறப்பட்டிருந்தன. சைப்ரஸ் கடற்கரைக்கு அருகிலுள்ள […]













