இலங்கை செய்தி

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிந்தவூரில் துப்புரவுப் பணிகள் தீவிரம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக பிரதேச சபை ஊழியர்களினால் குறித்த பகுதிகள் கட்டம் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கலாச்சார மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை