ஆஸ்திரேலியா செய்தி

ஐஎஸ் பெண்கள் விவகாரம்: உதவ மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சில ஆஸ்திரேலிய பெண்கள், இன்னும் சில நாட்களில் சிரியாவிலிருந்து தாயகம் திரும்பக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இவ்வாறு நாடு திரும்ப உத்தேசித்துள்ள குழுவினருக்கு அரசாங்கம் எந்தவொரு உதவியையும் வழங்காது என்று ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தற்போது சிரியாவின் ‘அல்-ரோஜ்’ அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இவர்களை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் வரை 10 மணித்தியாலங்கள் தரைவழியாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டமாஸ்கஸிற்குச் சென்றடைந்த பின்னர், […]

இந்தியா செய்தி

செப்டம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

  • May 20, 2026
  • 0 Comments

BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வருகின்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குறித்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் உள்ளது. இந்நிலையில் மே 14ஆம் திகதி பிரிக்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. […]

இலங்கை

பால்மாவின் விலை அதிகரிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய , 400 கிராம் பால்மா பெக்கட் ஒன்றின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலையை 125 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் அந்நிய செலாவணி நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை தற்போது வணிகவளாகங்களில் காணப்படும் பால்மா பெக்கட்டின் விலை அதிகரிக்கப்படாது என்றும், அடுத்து இறக்குமதி செய்யப்படும் தொகுதிக்கே […]

அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: ராஜபக்சவின் மகன் சூளுரை!

  • May 20, 2026
  • 0 Comments

“எவ்வாறான அச்சுறுத்தல்கள், சவால்கள் வந்தாலும் ஒற்றையாட்சி மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் முன்நிற்போம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. புலிகளுக்கு எதிராகவே போர் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களுக்கு நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது. ஆனால் விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுந்தரப்பு வெக்கப்பட வேண்டும். அதேவேளை, பொருளாதாரம் […]

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 20, 2026
  • 0 Comments

ஜப்பானின் ககோஷிமா (Kagoshima) மாகாணத்தின் தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியில்  (Amami) 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகினாவா மாகாணத்தின் பிரதான தீவின் கடற்கரைக்கு அப்பால், பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக  ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் மேற்படி நிலநடுக்கத்தினால்உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க சொத்து சேதமோ எதுவும் பதிவாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தி விளையாட்டு

ஓரிடத்துக்காக 5 அணிகளுக்கிடையில் போட்டி!

  • May 20, 2026
  • 0 Comments

2026 IPL கிரிக்கெட் தொடரில் play-off சுற்றில் வெற்றிடமாக உள்ள ஓரிடத்துக்கு வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றது. கடந்த தொடர்களை விடவும் இம்முறை IPL சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்கனவே play-off சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) அணி, முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் […]

செய்தி விளையாட்டு

கொல்கத்தா அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் play off வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் playoff வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – அமெரிக்கா பற்றவைத்த நெருப்பு : தீயில் மூழ்கிய உலக நாடுகள்!! வெளியான கணிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ளது. மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி முற்றுகையால்  விநியோக சங்கிலியில் தொடரும் சிக்கல்களை காரணம் காட்டி புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 2025இல்  மதிப்பிடப்பட்ட 3.0% உடன் ஒப்பிடுகையில், 2026-ல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதக் கணிப்பை விட 0.2 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், […]

செய்தி விளையாட்டு

சூரியவன்ஷி அதிரடி: ராஜஸ்தான் வெற்றி!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி […]

இலங்கை ஐரோப்பா செய்தி

“அரசியலையும், அபிவிருத்தியையும் பிரிக்க முடியாது” – பிரிட்டனில் பிரதமர் உரை!

  • May 20, 2026
  • 0 Comments

“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, […]