உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார்.

அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்

பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க முயற்சிப்பதாகவும்,  ஆனால் அது இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அஸ்லானி தெரிவித்தார்.

போர் மற்றும் பாதுகாப்பின்மை சூழலில் மக்கள் பொருளாதாரத்தை விட பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும்,  தற்போதைய நிலையில் ஈரானியர்களுக்கு உயிர் பிழைப்பதே முதன்மை கவலையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பொருளாதார பிரச்சினைகள் பின்னர் கவனிக்கப்படும் என தாம் நம்புவதாகவும் அஸ்லானி மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!