உலகம்

யானைகளுக்கு மன அழுத்தம்!!

தென்னாப்பிரிக்காவில், அரசுக்குச் சொந்தமான ஜோகன்னஸ்பர்க் மிருகக்காட்சிசாலையில் உள்ள 03 யானைகள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி அவற்றை இடமாற்றம் செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

லாம்மி, ரமாடிபா மற்றும் மோபேன் என அழைக்கப்படும் யானைகள் மனச்சோர்வுடன் இருப்பதாகவும், எவ்வித தூண்டுதல்களும் இல்லாமல் ஒரு கால்பந்து மைதானத்தை விட சற்றே பெரிய அடைப்பிடத்தில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவற்றை ஒரு பெரிய பாதுகாப்புப் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய விலங்குநலக் குழுக்கள் வாதிடுகின்றன.

இது தொடர்பில் குறித்த குழுவினர் சட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த வழக்கு இந்தவாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜோகன்னஸ்பர்க் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் யானைகள் நன்கு பராமரிக்கப்படுவதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பிரபலமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!