உலகம் செய்தி

உலகளவில் உச்சம் தொட்ட மரண தண்டனை: ஈரானில் நிலைமை மோசம்!

உலகளவில் மரண தண்டனைகள் கடந்த வருடம் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் உலகளவில் 2,700-க்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரணதண்டனைகளில் சுமார் 2,100 தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மரண தண்டனை நிறைவேற்றம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்க மரண தண்டனையை பயன்படுத்துவது தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

சீனா, வடகொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் மரண தண்டனை புள்ளிவிவரங்களை ரகசியமாக வைத்திருந்தாலும், அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!