உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – அமெரிக்கா பற்றவைத்த நெருப்பு : தீயில் மூழ்கிய உலக நாடுகள்!! வெளியான கணிப்பு!

உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ளது.

மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி முற்றுகையால்  விநியோக சங்கிலியில் தொடரும் சிக்கல்களை காரணம் காட்டி புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2025இல்  மதிப்பிடப்பட்ட 3.0% உடன் ஒப்பிடுகையில், 2026-ல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஜனவரி மாதக் கணிப்பை விட 0.2 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், பெருந்தொற்றுக்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களை விட மிகவும் குறைவாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு, எரிசக்தி நிறுவனங்களுக்கு எதிர்பாராத ஆதாயங்களை வழங்கியுள்ளது, ஆனால் குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோல் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளால், அதன் விலை உயர்ந்துள்ளது. இது பயிர் விளைச்சலைக் குறைத்து, உணவுப் பொருட்களின் விலைகள் மீது மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

தற்போதைய பதற்ற நிலையால்  மேற்கு ஆசிய நாடுகள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  அங்கு உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்களால் வளர்ச்சி 3.6 சதவீதத்தில் இருந்து  1.4 சதவீதமாக  வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஒப்பீட்டளவில் மீள்திறனுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான குடும்பத் தேவை மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளின் காரணமாக,  2025  இல் காணப்பட்ட 2.0 சதவீத வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ஐரோப்பா அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பது குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி 1.5%-இலிருந்து 1.1%-ஆகவும், பிரிட்டனில் 1.4%-இலிருந்து 0.7%-ஆகவும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் பன்முகப்படுத்தப்பட்ட எரிசக்தி கலவை, கணிசமான மூலோபாய கையிருப்புகள் மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவை ஒரு பாதுகாப்பு வளையத்தை வழங்குகின்றன எனவும் அதன் வளர்ச்சி 5.0 சதவீதத்தில் இருரந்து  4.6 சதவீதமாக  இருக்கும் எனவும்  கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் உற்பத்தி 7.5%-க்கு எதிராக 6.4%-ஆக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,