படையினருக்காக நாம் களமிறங்குவோம்: ராஜபக்சவின் மகன் சூளுரை!
“எவ்வாறான அச்சுறுத்தல்கள், சவால்கள் வந்தாலும் ஒற்றையாட்சி மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் முன்நிற்போம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. புலிகளுக்கு எதிராகவே போர் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களுக்கு நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது.
ஆனால் விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுந்தரப்பு வெக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.” – என்றார் நாமல் ராஜபக்ச




