ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ஜப்பானின் ககோஷிமா (Kagoshima) மாகாணத்தின் தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியில் (Amami) 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகினாவா மாகாணத்தின் பிரதான தீவின் கடற்கரைக்கு அப்பால், பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மேற்படி நிலநடுக்கத்தினால்உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க சொத்து சேதமோ எதுவும் பதிவாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




