இந்தியா செய்தி

செப்டம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வருகின்றார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

குறித்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் உள்ளது.

இந்நிலையில் மே 14ஆம் திகதி பிரிக்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய திகதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

புடினின் இந்திய வருகைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!