ஐரோப்பா

தொழிற்கட்சி அரசாங்கத்தை எதிர்த்து மத்திய லண்டனில் ஒன்றுத் திரண்ட விவசாயிகள்!

  • March 5, 2025
  • 0 Comments

மத்திய லண்டனில் நேற்று (04.03) நடைபெற்ற ‘பான்கேக் தினப் பேரணியில்’ ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன்போது அரசாங்கத்தின் மரபுரிமை வரிக் கொள்கைக்கு எதிராகப் போராடுவதை நிறுத்த மாட்டோம் என்று சபதம் செய்தனர். ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிக்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை கடந்து சென்றதுடன், நாங்கள் பின்வாங்கமாட்டோம் என கோஷமிட்டுள்ளனர். £1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பண்ணைகளுக்கு 20 சதவீத மரபுரிமை வரி விகிதத்தை அறிமுகப்படுத்தும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

ஆசியா

தனது முதல் வான்வழி முன்னெச்சரிக்கை விமானத்தை முடிக்கும் தருவாயில் இருக்கும் வடகொரியா!

  • March 5, 2025
  • 0 Comments

வட கொரியா தனது முதல் வான்வழி முன்னெச்சரிக்கை விமானத்தை முடிக்கும் தருவாயில் இருப்பதாகத் தெரிகிறது, அந்நாட்டின் விமான படையின் சக்தியை அதிகரிக்கும்நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதன் வான்வழி கண்காணிப்பு திறன் அதன் போட்டியாளர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது, அதே நேரத்தில் அதன் பெரும்பாலான போர் விமானங்கள் மற்றும் பிற […]

ஆசியா

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் சீனா!

  • March 5, 2025
  • 0 Comments

சீனா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை இந்த வருடம் 7.2% அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பென்டகனும் பல நிபுணர்களும் சீனாவின் மொத்த பாதுகாப்பு செலவினம் மற்ற பட்ஜெட்டுகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள காரணங்களால் 40% அதிகமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றனர். எவ்வாறாயினும் இந்த பட்ஜெட்டானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதாகவும், இது பொருளாதார மந்த நிலையை பிரதிபலிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சீனாவின் இராணுவச் செலவு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரியதாக உள்ளது, மேலும் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

  • March 5, 2025
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும், விற்பனை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவிற்கு சூறாவளி அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்பிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு தயாராகும் வகையில், நாட்டில் உள்ள பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன, மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு […]

பொழுதுபோக்கு

மரணப் படுக்கையில் கல்பனா! கணவர் அதிரடி கைது

  • March 5, 2025
  • 0 Comments

பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இந்த நிலையில் கல்பனாவின் கணவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இரண்டு நாட்களாக தான் வீட்டில் இல்லை என கல்பனாவின் கணவர் கூறி இருக்கும் நிலையில், அவர் மீது இருக்கும் சந்தேகத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பா

போப் பிரான்சிஸிற்கு மீண்டும் சுவாசப் பிரச்சினை – மக்கள் பிரார்த்தனை

  • March 5, 2025
  • 0 Comments

போப் பிரான்சிஸ் மீண்டும் உயிர்வாயு மூச்சுக் கவசத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக வத்திகன் தெரிவித்திருக்கிறது. நேற்று இரண்டு முறை கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சையின்போது போப் விழிப்போடும் ஒருமித்த கவனத்தோடும் இருந்ததாகக் கூறிய வத்திகன் அவர் நன்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தது. நுரையீரல்கள் ரத்தத்துக்குப் போதுமான உயிர்வாயுவை அனுப்ப முடியாவிட்டால் அல்லது உடலில் மிதமிஞ்சிய கரியமில வாயு இருந்தால் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. போப் பிரான்சிஸ் குணமடைவதில் இது […]

பொழுதுபோக்கு

“லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்” நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

  • March 5, 2025
  • 0 Comments

தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதேபோல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற […]

செய்தி வாழ்வியல்

30 நிமிடங்கள் நடந்தால் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

  • March 5, 2025
  • 0 Comments

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடை பயிற்சி மிக முக்கியம். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடை பயிற்சியில் ஈடுபடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் நோய்களையும் தவிர்க்க உதவும். இரவு உணவுக்கு பிறகு எவ்வளவு நேரம் நடக்கலாம்? இரவு உணவு சாப்பிட்டபின், குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று உணர்வியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை படிப்படியாக 45 நிமிடங்களாக, அதிகரிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். எனினும் இரவு நேர நடை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

திரைப்படமாக தயாராகும் மஹிந்தவின் வாழ்க்கைப்பயணம்!

  • March 5, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்ஈ தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்குமே முயற்சித்துவருகின்றது. ஆகையினால்தான் அரசாங்கம் உரிய தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தாம் விரும்பியவாறு தன்னிச்சையாகத் […]