அரசியல் இலங்கை செய்தி

13 ஐ முழுமையாக அமுலாக்க ஆதரவு: கனடா தூதுவரிடம் சஜித் உறுதி!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவர் Isabelle Catherine Martin ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனநாயக ஆட்சி, மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரம், ஐஎம்எப் கடன் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் எதிர்க்கட்சி தலைவர், கனடா தூதுவருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கு கனடா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!