இலங்கை

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு! 1900இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இதற்கிடையே  தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களில்   1,966 குடும்பங்களைச் சேர்ந்த    7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 201 பேர் தற்போது 6 பாதுகாப்பான தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம்  123 வீடுகள் பகுதியளவிலும், 02 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்