இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

  • May 8, 2025
  • 0 Comments

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இன்று (08) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கிறது.

பொழுதுபோக்கு

ஒரு வாரத்தில் 100 கோடியை தாண்டியது ரெட்ரோ வசூல்…

  • May 8, 2025
  • 0 Comments

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே ஒன்றாம் தேதி தியேட்டரில் வெளியானது ரெட்ரோ படம். சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. பெரும் நம்பிக்கையில் வெளியான கங்குவா படம் காலை வாரிவிட்டது. இதனால் ரெட்ரோ படத்தை பெரிதும் நம்பியிருந்தார். அதேபோல் படம் வெளியான ஒரு வாரத்திற்கு உள்ளாகவே 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. ரெட்ரோ படத்திற்கான சக்சஸ் மீட்டும் சமீபத்தில் நடத்தப்பட்டிருந்தது. இந்த […]

பொழுதுபோக்கு

ரஜினி – லோகேஷ் கூட்டணியில் தளபதி பட லுக்குடன் ரஜினி

  • May 8, 2025
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. ‘இன்னும் 100 நாளில்’ என்ற கவுண்ட் டவுன் வீடியோ ஒன்றை இப்படத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். அதில் சவுபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோரது பின் தலைப் பகுதியை மட்டும் காட்டி, கடைசியில் ரஜினியின் முகத்தை மட்டும் சைட் ஆங்கிளில் காட்டினார்கள். அந்த குறிப்பிட்ட ‘ஷாட்’ல் உள்ள […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் மோதல்! இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

  • May 8, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. லாகூரில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, கராச்சிக்கான விமானங்கள் தற்போது வரை பாதிக்கப்படவில்லை என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் போருடன், இன்று காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா

இந்தியாவை பழிவாங்குவது உறுதி – பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் வாக்குறுதி

  • May 8, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும், இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். […]

உலகம்

ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வடகொரியா

  • May 8, 2025
  • 0 Comments

ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. வட கொரியாவின் தென்கிழக்கில் உள்ள கடலோர நகரமான வொன்சானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டித்துள்ள தென் கொரிய பாதுகாப்புப் படையினர், இது பிராந்தியத்தின் அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

விளையாட்டு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு ஏற்க தயாராகும் ஷுப்மன் கில்?

  • May 8, 2025
  • 0 Comments

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கில் தற்போது தனது வெளிப்படுத்தப்பட்ட திறமையின் காரணமாக தலைமைத்துவத்திற்கான போரை வழிநடத்துகிறார் என்பது இங்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷுப்மான் கில் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒருபோதும் தலைமை தாங்கியதில்லை என்றாலும், அவர் 5 டி20 […]

ஐரோப்பா

லண்டனில் வழக்கத்திற்கு மாறான வானிலை – மகிழ்ச்சியில் ஐஸ் கிரீம் வியாபாரிகள்

  • May 8, 2025
  • 0 Comments

லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலை நிழவுவதால் ஐஸ் கிரீம் வியாபாரிகளின் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகம் நாடும் பாரம்பரிய soft-serve வகை ஐஸ் கிரீம் விற்பனை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. லண்டனில் கோடைக்காலம் இன்னும் வரவில்லை. அதற்குள் வெப்பம் தாங்கமுடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடான வானிலையால் மக்கள் பெரும்பாலும் வெளியில்தான் பொழுதைப் போக்குகின்றனர். ஐஸ் கிரீம் விற்பனையும் சுறுசுறுப்பாக நடக்கிறது. குறிப்பாக மக்கள் “whippy” வகை ஐஸ் கிரீம்களை அதிகம் கேட்டு வாங்குவதாக வியாபாரிகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇன் 5 புதிய அம்சங்கள்!

  • May 8, 2025
  • 0 Comments

பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. உங்கள் சுயவிவரத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், தேவையற்ற குழு அழைப்பிதழ்கள் (அ) வாட்ஸ்அப்பில் செய்தி காட்சித்தன்மை குறித்த கவலைகள் இருந்தால், சரியான அமைப்புகளை இயக்குவது போதுமானது. ஒவ்வொரு வாட்ஸ்அப் பயனரும் தங்கள் சாட், அக்கவுண்ட் பாதுகாப்பாக வைத்திருக்க செயல்படுத்த வேண்டிய 5 முக்கிய தனியுரிமை அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். 1. மேம்பட்ட சாட் தனியுரிமை: வாட்ஸ்அப்பில் மேம்பட்ட […]

உலகம்

வெளிநாட்டவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் தாய்லாந்து!

  • May 8, 2025
  • 0 Comments

வெளிநாட்டவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய, புதிய விதிகளின் கீழ், மே முதலாம் திகதி முதல், அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தாய்லாந்திற்கு வருவதற்கு முன்பு டிஜிட்டல் வருகை அட்டையை ஒன்லைனில் நிரப்ப வேண்டும். தாய்லாந்திற்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த அட்டைக்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். தாய்லாந்து டிஜிட்டல் வருகை அட்டை வெளிநாட்டவரின் தனிப்பட்ட தகவல்களையும், அவர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தங்குமிடம் […]