பொழுதுபோக்கு

ரஜினி – லோகேஷ் கூட்டணியில் தளபதி பட லுக்குடன் ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’.

‘இன்னும் 100 நாளில்’ என்ற கவுண்ட் டவுன் வீடியோ ஒன்றை இப்படத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள்.

அதில் சவுபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோரது பின் தலைப் பகுதியை மட்டும் காட்டி, கடைசியில் ரஜினியின் முகத்தை மட்டும் சைட் ஆங்கிளில் காட்டினார்கள்.

அந்த குறிப்பிட்ட ‘ஷாட்’ல் உள்ள ரஜினியின் லுக்கை மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘தளபதி’ பட ரஜினி லுக்குடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி – லோகேஷ் கூட்டணியின் முதல் படம் என்பதாலும், ஒவ்வொரு தென்னிந்திய மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் இடம் பெறுவதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை இன்னும் அதிகமாக்கும் விதத்தில் ‘இன்னும் 100 நாளில் கூலி’ வீடியோ உள்ளதாக திரையுலகத்திலும் பேச்சு எழுந்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்