அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கைது
நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தின் முக்கிய பகுதியை ஆக்கிரமித்த பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களை வியாழக்கிழமை (மே 8) கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்று சாடி அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழகத் தலைவர் கிளேர் ஷிப்மன், பட்லர் நூலகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாகப் புகுந்ததில் இரண்டு பல்கலைக்கழக பாதுகாவல் அதிகாரிகள் காயமடைந்ததாகக் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டப்படி நூலகத்துக்குள் நுழைந்ததைக் காண முடிகிறது. டிரம்ப் நிர்வாகம் தடைசெய்த கெஃபியா எனப்படும் ஒருவகை […]













