உலகம்

அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) விமானங்கள் ஸ்தம்பிப்பு

  • October 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) நாடு முழுவதும் தனது அனைத்து விமானப் போக்குவரத்துகளையும் அதிரடியாக நிறுத்தி வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த திடீர் முடிவுக்குக் காரணம், நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மிக மோசமான தகவல் தொழில்நுட்ப (IT) செயலிழப்பு ஆகும். நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதால், பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் இன்னலுக்கு ஆளாகினர். விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் […]

உலகம்

2033ஆம் ஆண்டுக்குள் 6 லட்சம் பணியிடங்களில் ரோபோக்களை நியமிக்க அமேசான் திட்டம்!

  • October 24, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய இணைய விற்பனை நிறுவனமான அமேசான், தனது எதிர்காலச் செயல்பாடுகளில் மனிதப் பணியாளர்களைக் கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, ரோபோக்களைப் பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம், 2033ஆம் ஆண்டுக்குள் விற்பனையை இருமடங்காக்கவும் அமேசான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அமேசானின் இந்தத் திட்டத்திற்கமைய, விரைவில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளில் ரோபோட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம் மூலம் தனது 75 சதவீதச் செயல்பாடுகளை மிகக் குறைந்த மனிதப் பணியாளர்களுடன் […]

பொழுதுபோக்கு

சாதனை படைத்த “லோகா”வின் ஓடிடி திகதி அறிவிப்பு

  • October 24, 2025
  • 0 Comments

’லோகா சேப்டர் 1: சந்திரா’ படத்தின் ஒடிடி வெளியீடு குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் சூப்பர் வுமன் கதையாக இப்படம் உருவாகி அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் கேரள திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் […]

இலங்கை

மியன்மார் சைபர் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் மீட்பு

  • October 24, 2025
  • 0 Comments

மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பகுதியில் […]

பொழுதுபோக்கு

கவினின் மாஸ்க் பட வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

  • October 24, 2025
  • 0 Comments

கவின் நடிப்பில் மாஸ்க் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியுள்ளார். நாயகியாக ருஹானி ஷர்மாவும் பிரதான கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மாஸ்க் திரைப்படம் உலகம் முழுவது நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம்

சீனப் பிரிவு விற்பனையை மீண்டும் தொடங்கியுள்ள நெக்ஸ்பெரியா(Nexperia)

  • October 24, 2025
  • 0 Comments

டச்சு நாட்டைச் சேர்ந்த முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்பெரியாவின் (Nexperia) சீனப் பிரிவு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிப் விற்பனையை உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து அரசு நெக்ஸ்பெரியாவின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதாலும், சீன சிப் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததற்கு பின்பு விநியோகச் சங்கிலியில்(supply chain)ஏற்பட்ட நெருக்கடியைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டாலும், சீனப் பிரிவு ஒரு கடும் நிபந்தனையை விதித்துள்ளது. இனிமேல், உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கான அனைத்து […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை நேரத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு!

  • October 24, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் திட்டத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (24)   செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அதிகாரிகள் முடிவை திருத்தத் தவறினால், வரவிருக்கும் பாடசாலை பருவத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் […]

உலகம்

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இரத்து செய்த ட்ரம்ப்!

  • October 24, 2025
  • 0 Comments

கனடாவுடனான “அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும்” இரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் காரணமாக அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த விளம்பரம் உண்மைகளை தவறாகக் குறிப்பிட்டதாகவும், அமெரிக்க நீதிமன்ற முடிவுகளை பாதிக்கும் நோக்கில் “மிக மோசமான நடத்தையை” வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு தனது நாட்டின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதாக கனேடிய பிரதமர் மார்க் […]

உலகம் விளையாட்டு

NBA-வை அதிர்சிக்குள்ளாக்கிய சூதாட்டப் புகார்கள்: முன்னாள் சாம்பியன் சௌன்சி பில்லப்ஸ்(Chauncey Billups) கைது

  • October 24, 2025
  • 0 Comments

போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஸர்ஸ் (Portland Trail Blazers) அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் NBA(National Basketball Association) சாம்பியனுமான சௌன்சி பில்லப்ஸ் (Chauncey Billups), மாஃபியாவுடன் (Mafia) தொடர்புடைய சட்டவிரோத போக்கர் (Poker) சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது NBA உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் FBI நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி கைதுகள் நடந்துள்ளன. பில்லப்ஸ், சட்டவிரோத போக்கர் ஆட்டங்களை நடத்தியதாகக் கூறப்படும் […]

பொழுதுபோக்கு

இலங்கையர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்… ஜீ தமிழ் மேடையில் சபேசனுக்கு நடந்தது என்ன?

  • October 24, 2025
  • 0 Comments

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முதல் பைனலிஸ்ட்டாக சுசந்திகா தெரிவுசெய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து அந்த கதிரையில் அமர கடுமையான போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் பைனலிஸ் தெரிவுக்குப்பின் வந்த வாரம் நால்வர் கோல்டன் பர்வோமன்ஸ் பெற்றாலும் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை. கடந்த வாரம் தீபாவளி என்பதால் பைனலிஸ்ட் தெரிவு இடம்பெறாவில்லை. ஆனால் இந்த […]