இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (FCID) தனியார் வங்கிகளுக்குச் சென்று நேரடியாகவே சென்று இந்த அதிரடிப் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறானதொரு நிதியியல் குற்றச்சாட்டின் கீழ் வங்கி முகாமையாளர்கள்கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றப் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர், கைதான 4 வங்கி முகாமையாளர்களுக்கும் வாராந்த அடிப்படையில் பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார்.

வங்கி அதிகாரிகளுக்கு வாரத்திற்கு ரூ. 30,000, ரூ. 50,000 மற்றும் ரூ. 100,000 வரை பணப்பரிமாற்றங்களின் அளவிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைதான முகாமையா ஒருவருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை லஞ்சமாகக் கிடைத்துள்ளதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை