பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ளது – அகழ ஒப்புதல்
பிரித்தானியாவின் வடகடல் பகுதிகளில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள புதிய பிரதமர் ஆண்டி பர்னம் அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது பிரித்தானியாவை உலக நாடுகளில் செல்வந்த நாடாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் வடகடலில் 700 ஆண்டுகளுக்கு தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் கூறினார்.
இங்கிலாந்திடம் கணிசமான வளங்கள் இருந்தபோதிலும், அது காற்றாலைகளைச் சார்ந்திருப்பதையும், நார்வேயிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்த ஆண்டின் நான்காவது வெப்ப அலையை இங்கிலாந்து சந்தித்து வரும் நிலையில், வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் பரவலான வறட்சி நிலவி வருவதால், புதைபடிவ எரிபொருட்களின் மீதான சார்பைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில் ட்ரம்பின் இந்த கூற்றுக்கள் வந்துள்ளன.




