இலங்கை

இனி மோட்டார் சைக்கில்களிலும் சுவசெரிய சேவை

1990 சுவா செரிய அறக்கட்டளை, தற்போது மோட்டார் சைக்கிள் மூலமும் தனது சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு விரைவான மருத்துவ உதவியை வழங்கும் நோக்கிலும், அவசர மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது.

அறக்கட்டளையின்படி, இந்த புதிய சேவையானது, குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ் சேவைகள் தாமதமாகும் பகுதிகளில், இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவசர மருத்துவ உதவிக்கான அணுகலை மேம்படுத்தவும், விரைவான பதிலளிப்பு நேரத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று சுவா செரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்