ஐரோப்பா

இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் வரட்சி : சுற்றுச்சூழல் முகமை அறிவிப்பு

இங்கிலாந்தில் குறிப்பிட்ட 07 பகுதிகள் அதிகாரப்பூர்வமாக  வரட்சியான பகுதிகளாக சுற்றுச்சூழல் முகமையால்  அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஈஸ்ட் ஆங்லியா, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும்  லண்டன்

தேம்ஸ் பள்ளத்தாக்கு, ஹாம்ப்ஷையர் மற்றும் ஐல் ஆஃப் வைட்,

டெவோன் மற்றும் கார்ன்வால், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், மற்றும் வெசெக்ஸ்  ஆகிய இடங்களே வரட்சியான பகுதிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரமான குளிர்காலம் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்ட மழையில் 7 சதவீதம்  மட்டுமே பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வறண்ட மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் முகமையின் ஹெலன் வேக்ஹாம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எம்மா ஹார்டி உள்ளிட்ட அதிகாரிகள், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஏற்பட்டுள்ள கோடை வறட்சியின் தீவிரத்தை எடுத்துரைத்துள்ளனர்.

அதன் நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள், நீர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டின் அவசியம் ஆகியவற்றையும் வலியுறுத்துகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்